சைபர்ஜெயா ஏரி கொலை வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை டிபிபியிடம் போலீசார் ஒப்படைத்தனர்

சிப்பாங்: சைபர்ஜெயா அருகே ஏரியில் சடலம் கண்டெடுக்கப்பட்ட கொலை வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை அரசு துணை வழக்கறிஞர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.  Sepang மாவட்ட OCPD  Md Noor Aehwan Mohamad, தொடர்பு கொண்டபோது, இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

வழக்கு அரசு தரப்பு வழக்கறிஞரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும்அவர்களின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கூறினார். முன்னதாக, சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 23 முதல் 52 வயதுடைய மூன்று இந்திய நாட்டு பிரஜைகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட சண்டையே கொலைக்கான காரணம் என்று கூறப்படுகிறது. கொலையின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தி ஒன்று கைது செய்யப்பட்ட போது கண்டுபிடிக்கப்பட்டது.

பிப்ரவரி 11 அன்று, மஸ்ஜித் ராஜா ஹாஜி ஃபிஸபிலில்லா சைபர்ஜெயாவுக்குப் பின்னால் உள்ள ஏரியில் ஒரு சடலம் மிதப்பதைக் கண்டு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடலைச் சோதித்ததில் தலையில் மூன்று வெட்டுக் காயங்கள் இருந்ததையும், பாதிக்கப்பட்டவரின் இடது மணிக்கட்டு கிட்டத்தட்ட முற்றிலும் துண்டிக்கப்பட்டதையும் காட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here