தனது வீடு தீப்பற்றி எரிவதைக் கண்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சரிந்த இல்லத்தரசி; மருத்துவமனையில் அனுமதி

சுங்கை பட்டாணியின் தாமன் ரியா ஜெயாவில் உள்ள தனது வீடு, இன்று காலை தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஒரு இல்லத்தரசி மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சரிந்து விழுந்தார்.

50 வயதுடைய சித்தி ஆயிஷா என்ற பெண்ணே திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சரிந்து விழுந்தார், இருப்பினும் அவரது அண்டை வீட்டாரின் விரைவான நடவடிக்கை மூலம். அவருக்கு உடனடியாக ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டாதால், அவரது உடல்நிலை இப்போது சீராக உள்ளது.

இதயப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த சித்தி ஆயிஷா, பின்னர் மேல் சிகிச்சைக்காக தீயணைப்புத் துறையின் அவரை சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு (HSAH) கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை 9.20 மணியளவில் சித்தி ஆயிஷாவும் அவரது கணவரும் அருகில் உள்ள சந்தையில் சமையல் பொருட்களை வாங்க வெளியே சென்றிருந்தபோது, அவர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

“வீடு தீப்பிடித்து எரிவதாக தனக்குத் தகவல் கிடைத்ததும், மாற்றுத்திறனாளியான (OKU) தன் சகோதரனின் பாதுகாப்பு குறித்து தான் கவலைப்பட்டதால், உடனடியாக வீட்டிற்கு விரைந்ததாகவும், ஆனால் அவரது சகோதரன் அவரது மகன் மற்றும் அண்டை வீட்டாரால் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டதாகவும், இவ்விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படாததற்கு தான் நன்றியுள்ளவராக இருப்பதாகவும்,” சித்தி ஆயிஷா கூறினார்.

இச்சம்பவத்தினால் வீட்டின் 95 வீதமான பகுதி எரிந்துள்ளதுடன், பக்கத்து வீடு 20 வீதம் எரிந்துள்ளது. மேலும் யமஹா நௌவோ ரக மோட்டார் சைக்கிளும் நாசமடைந்துள்ளதாக மண்டலம் 2 இன் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைவர், மூத்த கண்காணிப்பாளர் சியோபிரின் அபி காதிர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here