பேரரசரை அவமதிக்கும் கருத்துக்களை முகநூலில் பதிவு செய்த குற்றச்சாட்டில் தோட்டத் தொழிலாளிக்கு RM6,500 அபராதம்

கடந்தாண்டு டிசம்பரில், மாட்சிமை தங்கிய பேரரசரை அவமதிக்கும் முகமாக தனது முகநூல் பக்கத்தில் பதிவினை இட்ட குற்றச்சாட்டில், தோட்டத் தொழிலாளி ஒருவருக்கு, RM6,500 அபராதம் விதிக்கப்பட்டதுடன், அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்தாண்டு டிசம்பர் 10-ம் தேதி அதிகாலை 3.23 மணியளவில், ‘As Bul’ என்ற முகநூல் கணக்கைப் பயன்படுத்தி, மற்றவர்களை தொந்தரவு செய்யும் நோக்கத்துடன், அவதூறான தகவல்தொடர்புகளை பரப்பியதாகவும், இணைய வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தியதற்காகவும் முஹமட் ஹனிஸ் நோர்டின் (34) என்பவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி நோர் ஹஸ்னியா அப்துல் ரசாக் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை குற்றம் சாட்டப்பட்ட முஹமட் ஹனிஸ் நோர்டின் ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here