ஜோகூரின் மூன்று கூட்டரசு சாலைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும் – முகமட் ஃபாஸ்லி

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக, ஜோகூர் மாநில அரசு இந்த ஆண்டு மாநிலத்தில் சேதமடைந்த நிலையிலுள்ள மூன்று கூட்டரசு சாலைகளை பராமரித்து, மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது என்று, ஜோகூர் பொதுப்பணி, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு சங்கத்தின் தலைவர் முகமட் ஃபாஸ்லி முகமட் சலே தெரிவித்தார்.

அம்மூன்று சாலைகள் FT01 (மூவார் -யோங் பெங் -ஜோகூர் பாரு), FT03 ( மெர்சிங் -கோத்தா திங்கி -ஜோகூர் பாரு) மற்றும் FT05 (மூவார்-பத்து பகாட் பொந்தியான்-ஜோகூர் பாரு) என்பன உள்ளடக்கப்படுவதாகவும், அவை முக்கிய சாலைகளாக இருந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால், அம் மூன்று சாலைகளும் மோசமாக சேதமடைந்துள்ளன என்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை FT1416 சாலை (ஜாலான் இனாஸ்-கோத்தா திங்கி) மேம்படுத்தும் பணிகளை பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here