ஜோகூர் மற்றும் சரவாக்கில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய தொடர் மழை நீடித்தால், அங்குள்ள பல மாவட்டங்களில் அடுத்த 12 மணி நேரத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்பாசன மற்றும் வடிகால் துறை அறிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசியா-ஓசியானியா ஃப்ளாஷ் வெள்ள வழிகாட்டுதல் அமைப்பு (SAOFFGS) மற்றும் நீர்பாசன மற்றும் வடிகால் துறையின் சொந்த வெள்ள முன்னறிவிப்பு மாதிரி ஆகியவற்றின் வானிலை முன்னறிவிப்புகளின் அடிப்படையில், இந்த வெள்ள எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டதாக இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.