மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (MCMC) புதிய தலைவராக டான்ஸ்ரீ முகமட் சலீம் ஃபதே டின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனம் நாளை மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் என்றும், இரண்டு ஆண்டுகள் அவர் தலைவராக செயலாற்றுவார் என்றும் தகவல் தொடர்பு மற்றும் இல்லக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாசில் இன்று தந்து முகநூல் பதிவின் மூலம் அறிவித்தார்.
“இன்னும் இணைய அணுகலைப் பெறாத மூன்று விழுக்காடு மக்கள் உட்பட, அனைத்து தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு சிக்கல்களையும் சமாளிக்கவும், இல்லக்கவியல் இடைவெளியை நிவர்த்தி செய்யவும், மலேசியாவை தங்க இயக்கவியல் தசாப்தத்தை நோக்கி நகர்த்தவும் அவரது நியமனம் எங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். “என்று அமைச்சர் அப்பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
முகமட் சலீம் முன்னதாக MCMC வாரிய உறுப்பினராகவும், ஜூன் 2022 முதல் ஜனவரி 2023 வரை இடைக்கால தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










