கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் இருவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்

கூச்சிங், சரிகேய் பிரிவிலுள்ள Bintangor இல் உள்ள Scheme B என்ற இடத்தில், இன்று அதிகாலை கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில், இருவர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அதிகாலை 2.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், Scheme B திசையிலிருந்து Bintangor நகரை நோக்கி ஹோண்டா சிட்டியில் காரில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர் என்றும், சம்பவ இடத்திற்கு வந்தபோது, சாலையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, வலுவான நீரோட்டத்தால் கார் இழுத்துச் செல்லப்பட்டது என்று, சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

குறித்த சம்பவம் தொடர்பில், அதிகாலை 2.52 மணிக்கு சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே Bintangor தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) ஆறு உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.

“இடத்திற்கு வந்தபோது, ​​​​​​​​ஒரு கார் வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் ​​காரில் இருந்த இரு ஆண்களும் எந்த காயமும் இன்றி வெளியே மீட்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

“மீட்கப்பட்ட இருவரும் பின்னர் Bintangor நகருக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here