ஜோகூர் வெள்ளம்: வாகனம் பழுதுபார்க்கும் கடை உரிமையாளருக்கு ஒரு இலட்சம் இழப்பு

இரண்டு நாட்களாக ஜோகூரின் பல பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால், ஜாலான் கோத்தா கேசில் 1ல் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் பட்டறை வளாகம் வெள்ளத்தில் மூழ்கியதால், அந்தப் பட்டறை உரிமையாளர் ஒருவருக்கு சுமார் RM100,000 இழப்பு ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறை உரிமையாளரான 43 வயதான ஹைருல் ஹெல்மி அப்துல் ரஹ்மான் கூறுகையில், தனது வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான 8 கார்களும் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியதாக கூறினார்.

“நேற்று காலை 11 மணியளவில், வெள்ள நீர் 1.5 மீட்டர் அளவு வேகமாக உயர்ந்தது, எதையும் எடுத்து வைக்க எனக்கு நேரம் இல்லை. ஆறு வருடங்கள் இங்கு வியாபாரம் செய்து வருகிறேன். நான் எதிர்கொள்ளும் மோசமான பேரழிவு இதுவாகும்,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் துப்புரவு பணிகளுக்காகவும், வெள்ளத்தால் சேதமடைந்த உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை சரிசெய்யவும் சுமார் இரண்டு வாரங்களுக்கு தனது பட்டறையை மூட வேண்டியுள்ளதாக ஹைருல் ஹெல்ம் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here