ஜோகூர், சபாவைத் தொடர்ந்து நெகிரி செம்பிலானும் வெள்ளத்தில் மூழ்கியது

நாட்டின் சில மாநிலங்களில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக ஜோகூர், சபா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இவ்விரு மாநிலங்களைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநிலமும் சமிபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள் தங்குவதற்காக 9 தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தாம்பின் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு தலைவர், முஹமட் ஃபாடில் ஹாசன் கூறினார்.

இன்று பிற்பகல் 6 மணி வரை, தாம்பின் மாவட்டத்தில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 46 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் பிற நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோர் பற்றிய தரவு இன்னும் சேகரிக்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

மாநிலத்தில் இன்னும் மழை பெய்து வருவதால், அனைத்து ஏஜென்சிகளையும் தயார் நிலையில் இருக்குமாறும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் குடியிருப்பாளர்கள் அதிகாரிகளால் வெளியேற அறிவுறுத்தப்பட்டால் அதற்கு தயாராகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், ”என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here