விரைவு பேருந்து தீப்பிடித்தது; 24 பயணிகள் உயிர் தப்பினர்

தாப்பா, பீடோர் அருகே லாடாங் பிகாம் வடக்கு நோக்கிய ஆர்&ஆர் பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில் விரைவுப் பேருந்து தீ பிடித்ததில் அதில் பயணித்த மொத்தம் 24 பயணிகள்  உயிர் தப்பினர். பிற்பகல் 3.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

பீடோர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) தலைவர் அமிருல் ஹைகல் சியாபிக் நோர்டின், மாலை 4.19 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து ஒன்பது உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்றார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​சாலையோரத்தில் எரிந்து கொண்டிருந்த விரைவுப் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. பேருந்து கோலாலம்பூரில் இருந்து கேமரன்மலைக்கு சென்று கொண்டிருந்தது. டிரைவர் மற்றும் 24 பஸ் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்.

உறுப்பினர்கள் முழு தீயையும் அணைக்க சுமார் 30 நிமிடங்கள் எடுத்தனர். பேருந்தின் 80% எரிந்தது. நாங்கள் இன்னும் மதிப்பீடு மற்றும் சம்பவத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

பிபிபி ஸ்லிம் ரிவர் மற்றும் தாப்பா தீயணைப்பு  வீரர்களின் உதவியுடன் மாலை 5.30 மணிக்கு பணி நிறைவடைந்தது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here