நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 369 போலீஸ்காரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ் படை தலைவர், டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் பல மீட்புக் குழுக்களுடன் இணைத்து, தேசிய போலீஸ்படை உறுப்பினர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
“சிகாமாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் சாஹ் காவல் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. அதன்படி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் நடவடிக்கைகள் வெள்ள நிலைமை சீரடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன, ”என்று புக்கிட் அமானில் இன்று நடந்த சிறந்த சேவை விருது வழங்கும் விழாவிற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரிடர் இந்த வெள்ளபெருக்கு என்றும், வெள்ளம் காரணமாக ஜோகூரில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 33,149 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.