நேற்று பகல் மொத்தம் 36,191 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை நேற்று இரவு நிலவரப்படி மொத்தம் 38,120 பேராக அதிகரித்துள்ளது.
சமூக நலத்துறையின் InfoBencana போர்டல் அறிக்கையின்படி, ஜோகூரில் 34,849 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
அதே போல பகாங்கில் 2,186 பேரும், நெகிரி செம்பிலானில் 867 பேர் , மலாக்காவில் 204 பேர் மற்றும் சரவாக்கில் 14 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.