பெர்சாத்து கட்சியின் கணக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டிருந்த பெர்சாத்து பொருளாளர் முகமட் சாலே பஜூரி இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த தகவலை பெர்சாத்து கட்சியின் தகவல் தொடர்பு தலைவர், டத்தோ ரசாலி இட்ரிஸை இன்று (மார்ச் 4) உறுதிப்படுத்தினார்.
“முகமட் சாலே ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், இந்தக் கைது பொதுமக்களின் பார்வையில் பெர்சாத்துவின் பெயரை மற்றும் நம்பிக்கையைக் கெடுக்கும் ஒரு முயற்சி என்றும் அவர் கூறினார்.
“இந்த சூழலைப் பார்க்கும்போது, மேலும் பல பெர்சத்து தலைவர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.








