வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உணவு உதவிக்காக பெண்கள் அமைச்சகம் RM615,000 செலவிடுகிறது – நான்சி

தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு அனுப்பப்படும் உணவு விநியோகத்திற்காக பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் RM615,000 செலவிட்டுள்ளது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

உணவு உதவி இன்னும் விநியோகத்தில் உள்ளது என்றும், ஆனால் இந்த நிதி போதுமானதாக இல்லை, ஏனெனில் ஜோகூரில் மட்டும் சுமார் 40,000 மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இந்த உணவு உதவித் திட்டத்திற்காக தேசிய நலன்புரி அறக்கட்டளையிலிருந்து (YKN) பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் RM50,000 நன்கொடையையும் பெற்றது என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்புவோர் YKN மூலம் நன்கொடை அளிக்கலாம்,” என்றும் அவர் இன்று Laman Wanita Tasek Gelugorக்கு சென்ற பிறகு, செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதும் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,989 ஆக உயர்ந்துள்ளது, மேலும் பல மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைக்கு குழு செயலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here