நேற்று, லாபுவான் அருகே உள்ள படகுத்துறையில் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 27 வயதான துணை ஒப்பந்ததாரர் ஒருவர் கடலில் விழுந்து இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
புத்தாதான், பெனாம்பாங் , சபாவை சேர்ந்த Zamri Lamuseng என அடையாளம் காணப்பட்ட ஆடவர், ஷெல் திமுர்நிறுவனத்தில் கீழ் மேற்கொள்ளப்படும் பழுது பார்ப்பு நடவடிக்கைக்காக, காலை 11 மணியளவில் ஜெட்டியின் கீழ் சாரக்கட்டுகளை நிறுவியதாக நம்பப்படுகிறது, அப்போது அவர் தவறி கடலில் விழுந்தார் என்று லாபுவான் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அதிகாரி ரிஹாம் அப்துல்லா தெரிவித்தார்.
” உயிரிழந்த ஜம்ரியின் உடல் 16 மீட்டர் ஆழத்தில் தீயணைப்பு துரையின் நீர்மூழ்கி மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவக் குழு அறிவித்தது,” என்று அவர் மேலும் கூறினார்.















