கிளந்தானில் கோவிட் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 18%, 12 வயதிற்கு உட்பட்டவர்கள்

கோத்த பாரு: கிளந்தானில் கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களில் 18 விழுக்காட்டினர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.

மாநில அரசு, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதிக் குழுவின் தலைவர் டாக்டர் இசானி ஹுசின் கூறுகையில், கிளந்தான் தினமும் மூன்று இலக்க கோவிட் -19 தொற்றினை தொடர்ந்து பதிவுசெய்து வருகிறது. மேலும் நேர்மறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 18 விழுகாட்டினர் குழந்தைகள்.

அவர்கள் பெற்றோரிடமிருந்து அல்லது அதிகாரிகள் நிர்ணயித்த நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) பின்பற்றாத பிற பெரியவர்களிடமிருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசிக்கு பதிவு செய்ய அதிகமான உள்ளூர் மக்களை ஈர்க்கும் முயற்சியில், டாக்டர் இசானி விரைவில் ஒரு பெரிய பிரச்சாரம் மாநில அரசால் மேற்கொள்ளப்படும் என்றார். பல கிராமங்களில் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

முதல் திட்டம் கம்போங் படாங்கில் நடைபெறும், அங்கு கிராமவாசிகளை கைமுறையாக பதிவுசெய்து பின்னர் அவர்களுக்கு தடுப்பூசி போட சுகாதார அதிகாரிகள் அந்த பகுதிக்கு கொண்டு வரப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

நேற்றைய நிலவரப்படி, கிளந்தானில் 26,481 ஒட்டுமொத்த கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here