பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகர் ரிக்கோ பிரவுனிங். இவர் 1950-களின் 3 டி கருப்பு மற்றும் வெள்ளை திரைப்படமான ‘கிரியேச்சர் பிரம் த பிளாக் லகூன்’ என்ற படத்தில் நீருக்கடியில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானார். பிளிப்பர் என்ற ஹாலிவுட் படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது.

சில படங்களை டைரக்டு செய்தார். ஸ்டண்ட் நடிகராகவும் பணியாற்றி உள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவர் ஒரு நீச்சல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ரிக்கோ பிரவுனிங் வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி ரிக்கோ பிரவுனிங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93. ரிக்கோ பிரவுனிங் மறைவுக்கு நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here