மூன்று மாநிலங்களில் உள்ள 234 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 42,909 பேராக குறைந்துள்ளது

வெள்ளம் பாதித்த ஜோகூர், பகாங் மற்றும் மலாக்கா ஆகிய மூன்று மாநிலங்களில் வெள்ளம் காரணமாக குடியிருப்புக்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று காலை 8 மணி நிலவரப்படி 42,909 பேராகக் குறைந்துள்ளது.

இவர்கள் அனைவரும் மூன்று மாநிலங்களிலுமுள்ள 234 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேருடன் மேலாண்மை குழு செயலகம் தெரிவித்துள்ளது.

ஜோகூரில், நேற்று இரவு 16 நிவாரண மையங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, நேற்றிரவு 40,129 பேராக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 39,620 பேராகக் குறைந்துள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் கூற்றுப்படி, சிகாமாட் மாவட்டத்தில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது, ஆனால் பத்து பகாட், மூவார் மற்றும் தாங்காக் மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக குடியிருப்புக்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜோகூரில் தற்போதைய வெள்ளம் இதுவரை ஐந்து பேரின் உயிரை பலி கொண்டுள்ளது.

பகாங்கில், நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை, 766 குடும்பங்களைச் சேர்ந்த 2,684 பேர் இன்னும்அங்குள்ள 19 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மலாக்காவில் நேற்று இரவு 8 மணியளவில் 160 குடும்பங்களைச் சேர்ந்த 593 பேராக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இன்று காலை 161 குடும்பங்களைச் சேர்ந்த 605 பேராக சற்று அதிகரித்துள்ளது என்று அம்மாநில பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here