ஆயர் ஈத்தாமிலுள்ள யோங் பெங் நிவாரண மையத்தில் தங்கியிருந்த முதியவர் மரணம்

ஆயர் ஈத்தாமின் யோங் பெங்கில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியிருந்த 84 வயது முதியவர் நேற்று இயற்கை எய்தினார்.

காசிம் சூரிப் என அடையாளம் காணப்பட்ட அந்த முதியவர், வெள்ளம் காரணமாக டேவான் ஒராங் ராமாய் யோங் பெங்கிற்கு மாற்றப்பட்டதாக பத்து பகாட்மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் இஸ்மாயில் டோல்லா கூறினார்.

“அவர் நேற்று (மார்ச் 6) நண்பகல் 1.30 மணியளவில் குறித்த மையத்தில் இருந்தபோது மயக்கமடைந்தார், அதன் பின்னர் யோங் பெங் சுகாதார கிளினிக்கின் மருத்துவ அதிகாரி அவரது மரணத்தை உறுதிப்படுத்தினார்,” என்று அவர் கூறினார்.

இறந்தவர் வெள்ளிக்கிழமை (மார்ச் 3) முதல் தனது குடும்பத்துடன் குறித்த நிவாரண மையத்தில் பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டது. அத்தோடு அன்றிரவே, முதியவருக்கு கடுமையான வயிற்று வலிஏற்பட்ட்தாகவும், அவர் சிகிச்சைக்காக சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில்  ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) வரை அனுமதிக்கப்பட்டு, மீண்டும் நிவாரண மையத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

“இருப்பினும், திங்கள்கிழமை காலை 11.45 மணியளவில், அவர் சாப்பிடும் போது வாந்தி எடுத்தார் என்றும், பின்னர் அவரது கூடாரத்தில் ஓய்வெடுத்தபோது, அவர் மயக்கமடைந்தார்,” என்று அவர் கூறினார்.

உயிரிழந்த காசிமுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரைப்பை அழற்சி உள்ளிட்ட மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏசிபி இஸ்மாயில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here