செந்தூலில் ஆசிரியை ஒருவரை தாக்கி, கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மூவர் கைது

கடந்த பிப்ரவரி 25, 2023 அன்று செந்தூலின் தாமான் பெலாங்கியில் உள்ள ஒரு வீட்டில், ஆசிரியரை தாக்கி கொள்ளையடித்தது தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை போலீசார் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) அன்று கைது செய்தனர்.

பிப்ரவரி 25 அன்று நடந்த சம்பவத்தின் போது, சந்தேக நபர்கள் 45 வயது ஆசிரியை ஒருவரின் முகத்தில் குத்தியும், கழுத்தில் காயப்படுத்தியும், கேபிள் வயர்களால் கட்டியும் அவரை தாக்கிவிட்டு, அவரிடம் கொள்ளையடித்து தாக்கியதாக நம்பப்படுகிறது.

குறித்த பெண்ணிடமிருந்து RM6,000 ரொக்கம், ஒரு கைபேசி, ஒரு கைக்கடிகாரம் மற்றும் அவரின் வங்கி அட்டையுடன் சந்தேநபர்கள் தப்பிச் சென்றதாக, செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் பெஹ் எங் லாய் தெரிவித்தார்.

“போலீசார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 26 மற்றும் 35 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை டாமான்சாரா மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் தடுத்து வைத்தனர்.

இந்த கைதினைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் நான்கு வழக்குகளும் சிலாங்கூரில் ஒரு வழக்கும் தீர்க்கப்படலாம் என்று போலீசார் நம்புகிறார்கள்.

“ஒரு கும்பலாக கொள்ளையடிப்பதே சந்தேக நபர்களின் செயல் முறை என்றும் வீட்டுக்குள்ளே இருக்கும் மக்களை குறி வைத்து அவர்கள் கொள்ளையில் ஈடுபடுவதும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது ”என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here