மலேசியாவில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த மலேசிய பெண் பயணி ஒருவர், தனது உடலில் மறைத்து 740 கிராம் தங்கத்தை கடத்த முயன்றதாக இந்திய சுங்கத்துறை அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார்.
குறித்த பெண் பயணி மலேசிய பிரஜை என்று சென்னையின் செய்தித் தகவல் பணியகம் (PIB) தெரிவித்துள்ளது.
அவரிடம் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில், அந்தப்பெண் பல்வேறு வகையான டிசைன் கொண்ட 24 காரட் தங்க ஆபரணங்களை கடத்திச் சென்றார் என்றும், இந்திய சுங்கச் சட்டம் 1962 இன் கீழ் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
சென்னை அனைத்துலக விமான நிலையத்தின் சுங்க ஆணையாளர் கே.பி.ஜெயகர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின்படி, அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 3.62 மில்லியன் இந்திய ரூபாய் (RM194,480) என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.















