நாடு முழுவதும் பதிவாகும் குழந்தை துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், சபா மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார்.
சமூகத்தினரிடையே இது தொடர்பான விழிப்புணர்வு இல்லாமை மற்றும் இந்த வழக்குகளுக்கு பொறுப்பான அதிகாரிகளிடையே உள்ள அனுதாபம் உட்பட பல்வேறு காரணிகள் இதற்கு பங்களிக்கக்கூடும் என்று, பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரான அவர் கூறினார்.
“கடந்த 2022 இல் சமூக நல்வாழ்வுத் துறையானது சிறார் துஷ்பிரயோகம் மற்றும் உடல், பாலியல் மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம், புறக்கணிப்பு உட்பட மொத்தம் 6,781 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இவற்றில், சபாவில் 703 வழக்குகள் பதிவாகின, ”என்று அவர் மேலும் கூறினார்.
இதுதவிர, குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகளில் ஈடுபடுபவர்கள் குழந்தைகளை சரியாக கவனித்துக்கொள்வதை உறுதி செய்வதில் பெரிய பங்கை வகிக்க வேண்டும் என்று நான்சி கூறினார்.
“இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும், குறிப்பாக குழந்தைகள் புறக்கணிப்பு மற்றும் துஷ்பிரயோக வழக்குகளைக் கையாள்பவர்கள், அதிக புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும் மற்றும் தங்கள் வேலைகளில் சவால்களை எதிர்கொள்ளும்போது உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.