வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விடும் வர்த்தகர்களின் உரிமங்களை DBKL ரத்து செய்யும் – டாக்டர் ஜாலிஹா

கோலாலம்பூர்:

ஜாலான் சிலாங்கில் வணிக விதிமுறைகளை மீறி வெளிநாட்டவர்களுக்கு தமது கடையை அல்லது வணிக உரிமத்தை வாடகைக்கு விடும் வணிகர்களின் உரிமங்களை கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் முழுமையாக அல்லது தற்காலிகமாக ரத்து செய்யும்.

ஜலான் சிலாங்கில் நேற்று (டிசம்பர் 21) மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல்துறையின் பொது நடவடிக்கைப் படையின் விரிவான தகவலுக்காக அமைச்சகம் காத்திருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் (கூட்டாட்சிப் பகுதிகள்) டாக்டர் ஜலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

“வணிகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மாறாக வெளிநாட்டினருக்கு வணிகங்களை நடத்த அவர்களை ஊக்கிவிக்க அல்ல. வணிக உரிமம் தொடர்பில் மற்ற வளாகங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் நடத்துவோம். எனவே, நான் அதை செயற்படுத்த கூடுதல் தகவல்களைப் பெறுகிறேன். தலைநகரின் முக்கிய வணிக இடங்களில் சட்டவிரோத இடம்பெறும் வெளிநாட்டு வர்த்தகர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது DBKL இந்த முதன்மையான வேளைகளில் ஒன்றாகும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here