சபா நகரப்பகுதியில், இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 1950 களில் கட்டப்பட்ட ஆறு கடைத் தொகுதிகள் தீயில் எரிந்து நாசமானது.
நகரின் மத்திய வணிக மாவட்டத்தில் உள்ள பட்டஃபிளை பூங்கவில் அமைந்துள்ள ஆறு கடைகளில் ஏராளமான பொருட்களை விற்பனை செய்யும் 17 கடைகள் உள்ளன. அவற்றில் 16 கடைகள் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது, மற்றொன்று பகுதியளவில் எரிந்து நாசமானது” என்றும், மற்ற நான்கு கடைகளுக்கு தீ பரவுவதை தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயற்பட்டு தடுத்து நிறுத்தியதாக, சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைவர் ஆண்டி அலி தெரிவித்தார்.
குறித்த தீ விபத்து குறித்து அதிகாலை 2.23 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே சபா சென்ட்ரல், சுங்கை மேரா மற்றும் சிபு ஜெயா ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 29 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இந்த விபத்தில் உயிர் சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.