சிப்பாங்கிலுள்ள பாகன் லாலாங் கடற்கரையில் எட்டுப் பேருடன் சென்ற படகு நீரில் மூழ்கியதில், காணாமல்போன முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
67 வயதான ஆங் டோங் போவின் உடல், இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் கூறினார்.
சிப்பாங் கேச்சில் படகுத்துறையிலிருந்து தோராயமாக மூன்று கிலோமீட்டர் தொலைவில் படகு செலுத்துனரான முதியவரின் உடலைக் கண்டோம்” என்று அவர் கூறினார்.
சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.









