வனவிலங்குகளை வேட்டையாடும் குழுவைச் சேர்ந்த நால்வர் கைது; RM303,000 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

கிளாந்தான், குவா மூசாங்கைச் சுற்றி வனவிலங்கு வேட்டையாடும் குழுவை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் நால்வரை போலீசார் கைது செய்தனர்.

Operasi Bersepadu Khazanah (OBK) என்ற குறியீட்டு பெயரில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் சிறப்பு புலனாய்வுக் குழு, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை மற்றும் காவல்துறை இணைந்து , பிப்ரவரி 23 அன்று ஆரம்பிக்கப்பட்டது என்று காவல்துறை செயலாளர், டத்தோ நூர்சியா முகமட் சாதுதீன் கூறினார்.

இந்த நடவடிக்கையில் 34 முதல் 42 வயதுடைய மூவரை கைது செய்யப்பட்டதாகவும், அதன் விளைவாக சட்டவிரோத வேட்டையாடலுக்கு பயன்படுத்தப்படும் உரிமம் பெற்ற துப்பாக்கியின் உரிமையாளரான 65 வயதுடைய மற்றொரு ஆண் சந்தேக நபரையும் போலீசார் கைது செய்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து தலை மற்றும் தோல் இல்லாத புலியின் உடலின் (சடலம்) இரண்டு பாகங்கள் மற்றும் பல்வேறு பிராண்டுகளின் மூன்று கைத்தொலைபேசிகள் என மொத்தம் RM303,000 மதிப்புள்ள பொருட்களை அவர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

“சந்தேக நபர்கள் அனைவருக்கும் எதிராக மார்ச் 2 அன்று, கிளாந்தானில் உள்ள குவா மூசாங் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அதில் இரண்டு குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் RM450,000 அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் அபராதத்தை செலுத்தத் தவறினால் 12 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

” குற்றமற்றவர்கள் என்று கூறி விசாரணை கோரியவர்கள் இருவருக்கு RM30,000 ஜாமீன் வழங்கப்பட்டது மற்றும் ஏப்ரல் 10 தேதி வழக்கு மீண்டும் செவிமறுக்கப்படும் எனவும் கூறப்பட்டது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here