நான்கு மாநிலங்களில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 41,154 ஆக குறைந்துள்ளது

நான்கு மாநிலங்களில் வெள்ளம் காரணமாக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 41,994 ஆக இருந்த நிலையில், இன்று காலை 41,154 ஆக குறைந்துள்ளது.

ஜோகூரில், நேற்று இரவு 8 மணிக்கு 41,661 ஆக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 11,496 குடும்பங்களைச் சேர்ந்த 40,847 ஆகக் குறைந்துள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள 139 நிவாரண மையங்கள் இன்னும் செயற்பாட்டிலுள்ளதாக, ஜோகூர் பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலாக்காவில், நேற்று முதல் நான்கு நிவாரண மையங்கள் கட்டங்களாக மூடப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு 20 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேர் தங்கியிருந்தனர், இந்த எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 14 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேராகக் குறைந்துள்ளது என்று, பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பகாங்கில், ரோம்பின் மாவட்டத்தில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேர் இன்னமும் தங்கியுள்ளனர்.

சரவாக்கில், காலை 7 மணி நிலவரப்படி, கூச்சிங்கில் உள்ள 18 குடும்பங்களைச் சேர்ந்த 91 பேர் அங்குள்ள இரண்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here