RM100,000-க்கும் அதிக மதிப்புள்ள ஆமை முட்டைகளைக் கடத்தும் முயற்சி சரவாக் பொது நடவடிக்கைப் படையினரால் முறியடிப்பு

கூச்சிங், ஜூன் 6:

RM109,250 மதிப்புள்ள 11,700 ஆமை முட்டைகளைக் கடத்தும் முயற்சி சரவாக் பொது நடவடிக்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட Op Khazanah நடவடிக்கையின் கீழ் முறியடிக்கப்பட்டதுடன், இரண்டு உள்ளூர் ஆண்களையும் கைது செய்துள்ளனர்.

பொது நடவடிக்கைப் படை கமாண்டர், SAC டாக்டர் Che Ghazali Che Awang கூறுகையில், இங்கிருந்து வடக்கே 1,045 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாவாஸில் கடந்த சனிக்கிழமை, காலை 10 மணியளவில்
நான்கு சக்கர வாகனத்தில் வந்த இரு சந்தேக நபர்களின் வாகனத்தில் ஆமை முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,அவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்ட்னர் என்றார்.

“அனைத்து முட்டைகளும் அண்டை நாட்டிற்கு கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார், அவர்களிடமிருந்து RM80,000 மதிப்புள்ள வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இரண்டு சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக நடவடிக்கைக்காக லாவாஸில் உள்ள சரவாக் வனத்துறை நிறுவனத்திடம் (SFC) ஒப்படைக்கப்பட்டதாகவும், சரவாக் வனவிலங்கு பாதுகாப்பு ஆணை 1998 இன் பிரிவு 29(1) இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here