ஜோகூரில் 14,317 பேர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளதாக மாநில சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக் குழுத் தலைவர், லிங் தியான் சூன் கவலை தெரிவித்தார்.
ஜோகூரைத் தொடர்ந்து கிளாந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள் அதிகளவான போதைப்பித்தர்களை கொண்டுள்ளது என்றும், கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் நாடு முழுவதும் 137,176 போதைபித்தர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
ஜோகூரில் உள்ள பதினேழு இடங்கள் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுக்கான பிரதான இடங்களாக பயன்படுத்தப்பட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலான இடங்கள் ஜோகூர் பாரு மாவட்டத்தில் காணப்படுகின்றன. அவரில் பெரும்பாலானவை குறைந்த விலை வீட்டுப் பகுதிகள், செம்பனைத் தோட்டங்கள், மீனவ கிராமங்கள் மற்றும் கைவிடப்பட்ட கட்டிடங்கள் அல்லது குடியிருப்புகள் உள்ளிட்ட ஃபெல்டா குடியிருப்புகள் என்பன உள்ளடங்குகின்றன.
இவற்றை இல்லது ஒழிக்க காவல்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு நிறுவனங்களின் (AADK) ஒத்துழைப்புடன் அமலாக்க மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், நேற்று ஜோகூர் AADK நடத்திய சோதனையின் போது, ஒரு பெண் உட்பட 27 நபர்களை கைது செய்ததாகவும், இது 2025ஆம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத சூழலை அடைவதற்கான மாநில அரசின் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும் லிங்க் கூறினார்.