ஈப்போ டோல் சாவடியில் 9 வாகனங்கள் மோதிய விபத்தில் 6 பேர் காயம்

சிம்பாங் புலாய் டோல் சாவடி நுழைவாயிலில், நேற்று ஒன்பது வாகனங்கள் மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

நேற்று பிற்பகல் 2.34 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பல்நோக்கு வாகனங்கள் மற்றும் மூன்று டன் எடை கொண்ட லோரி, ஒரு டிரெய்லர் மற்றும் இரு இரண்டு- டன் லோரிகள் என்பன மோதியதாக, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக் மாநில துணை இயக்குநர் முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் கூறினார்.

“இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு (HRPB) அனுப்பப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் டோல் சாவடியில் இருந்து வெளியேறும் பகுதியில் உள்ள தடுப்பு கம்பி உள்ளிட்டவை இடிந்து விழுந்தது.

லோரி ஒன்று மற்றுமொரு லோரியின் பின்பகுதியில் மோதியதன் பின்னர், அது முன்னோக்கிச் சரிந்து மேலும் ஏழு வாகனங்கள் மீது மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here