அரசு நிர்வாக அமைப்பை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த ஆடவர் ஒருவருக்கு எதிராக ஜோகூர் காவல்துறை இதுவரை 16 புகார்களைப் பெற்றுள்ளது.
குறித்த காணொளி டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், 31 வினாடிகளைக் கொண்ட அந்தக் காணொளியில் குறித்த ஆடவர் அரசு நிர்வாக அமைப்பை அவமதிக்கும் வகையில், கீழ்த்தரமாக கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக போலீஸ் முறைப்பாடு வந்ததாக மாநில காவல்துறைத் தலைவர், டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.
குறித்த ஆடவருக்கு எதிராக “தேசத்துரோகச் சட்டத்தின் பிரிவு 4 (1), தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (b) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தை குலைக்கும் காக்கையில் அல்லது கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்னர் கவனத்துடன் இருக்குமாறு ஜோகூர் காவல்துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.