கெனிங்காவ் மாவட்டத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இந்தோனேசிய தொழிலாளி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 17) நீரில் மூழ்கி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
உயிரிழந்த 41 வயதான ஆடவருக்கு நீச்சல் தெரியாது என்றும், அவற் குளத்தில் விழுந்த பின், பாறைகளிலோ அல்லது சேற்றிலோ சிக்கிக் கொண்டதாக நம்பப்படுகிறது என்று, சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர், ஹம்சா இஸ்னுர்தினி கூறினார்.
கிலாங் ஜாவா பத்து 5, கெனிங்குவாவில், காலை 7.52 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது என்றும், தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் தனது நண்பருடன் மீன் பிடிக்க வலையைப் பயன்படுத்தியபோது, அவர் குளத்தில் தவறி விழுந்தார் என்றும், அவரது நண்பர் அவருக்கு உதவ முயன்றார், ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.