உயர்கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மெனு சிஸ்வா ரஹ்மா உணவை ருசி பார்த்தார் பிரதமர்

உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மெனு சிஸ்வா ரஹ்மாவை உணவை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று, இங்குள்ள யுனிவர்சிட்டி கெபாங்சான் மலேசியா (UKM) ராந்தாவ் ராசா உணவகத்தில் தனது மதிய உணவின் போது, சுவைத்ததைக் காணமுடிந்தது.

சம்பல் மற்றும் காய்கறிகளுடன் வறுத்த கேட்ஃபிஷ் உட்பட சில உணவுகளை அன்வர் ருசித்து சாப்பிட்டார். பிரதமருடன் UKM துணைவேந்தர், பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் எக்வான் டோரிமான், பல்கலைக்கழகத்தின் உயர்மட்டத் தலைவர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளும் இணைந்த மத்திய உணவு உண்டனர்.

நாட்டில் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் உள்ள சுமார் 320,000 வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள (B40) மாணவர்களுக்காக, உயர்கல்வி அமைச்சகத்தின் ஒரு முன்முயற்சியான இந்த மெனு சிஸ்வா ரஹ்மா உணவுத் திட்டம் உருவாக்கப்படட்து. இது குறித்த பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மலிவு விலையில், அதாவது வெறும் RM3.50க்கு உணவு வழங்குகிறது.

மதிய உணவுக்குப் பிறகு, பிரதமர் ரந்தாவ் ராசா உணவகத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள UKM பள்ளிவாசலில், இன்றைய வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here