பண்டார் பாரு சுங்கை பூலோவில் ஒரு குடும்பம் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து, வாய்க்காலில் மோதியதில் 4 வயது சிறுவன் பலத்த காயமடைந்தான்.
இன்று மாலை 5.36 மணிக்கு குறித்த சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்ததையடுத்து, காஜாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து ஒரு இயந்திரம் மற்றும் பணியாளர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர், மோர்னி மாமட் கூறினார்.
“ஜாலான் Jalan Liter D U19/D இல் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பயணித்த புரோத்தோன் வீரா கார் விபத்துக்குள்ளானது. இதில் 30 வயதுடைய ஆண் மற்றும் பெண் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும், நான்கு வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் இன்று வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றார்.