இனவாதத்தை விடுத்து உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி முதலீட்டாளர்களை கொண்டு வாருங்கள்; துன் மகாதீருக்கு லோக் கோரிக்கை

பட்டர்வொர்த்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது இனவாதப் பேச்சுக்களை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக தனது நற்பெயரையும், அரசியல்வாதி என்ற அந்தஸ்தையும் பயன்படுத்தி முதலீட்டாளர்களை மலேசியாவிற்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றார்.

கட்சியின் பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபூக் கூறுகையில், முன்னாள் பிரதமர் மற்றும் ஒரு அரசியல்வாதிக்கு பொருந்தாத இனவெறித்தனமான அறிக்கைகளை வெளியிட்டதற்காக மகாதீர் மீது அவர் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறினார்.

மலாய்க்காரர்கள் இனி தேசிய அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றும், பிரதமர் அன்வார் இப்ராஹிம் சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்க இயலாது என்றும் சமீபத்தில் மகாதீர் கூறினார்.

அவர் இந்த நாட்டை நேசிப்பவராக இருந்தால், அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக உதவ வேண்டும், இன உணர்வுகளை உயர்த்தாமல் இருக்க வேண்டும் என்று அவர் பினாங்கு டிஏபி மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நாட்டின் நல்வாழ்வுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலான இனக் குரோதங்களைத் தூண்டுவதற்கு உதவாத அறிக்கைகளை வெளியிடுவதற்குப் பதிலாக அவர் ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று போக்குவரத்து அமைச்சர் மேலும் கூறினார்.

மகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் (PH) அரசாங்கத்தில் மே 2018 முதல் மார்ச் 2022 வரை போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய லோக், ஐக்கிய அரசாங்கத்தை இன ரீதியாகத் தாக்கியிருக்கக் கூடாது.

ஏனெனில் அவரது அரசாங்கமும் இதே போன்ற தாக்குதல்களை எதிர்க்கட்சிகளில் இருந்து சந்தித்தது. அதனால்தான் அவர் இப்போது இதுபோன்ற உணர்வுகளைப் பயன்படுத்துவதில் நான் ஏமாற்றமடைந்தேன் என்று அவர் மேலும் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here