தேசிய காவல்துறையினர் உடல் கேமராக்களைப் பயன்படுதுவதை விரைவுபடுத்த வேண்டும்- MCW

OLYMPUS DIGITAL CAMERA

கோலாலம்பூர்:

ஊழல் செய்வதைத் தடுக்க, சட்ட அமலாக்கத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், குறிப்பாக தேசிய காவல்துறை (PDRM) உடல் கேமராக்களைப் பயன்படுத்துவது விரைவுபடுத்தப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கை சிறந்த கண்காணிப்பு முயற்சிகளில் ஒன்றாகும், குறிப்பாக PDRM உறுப்பினர்கள் நேர்மையாக செயல்படுவதை உறுதிசெய்யும் என்று, மலேசிய ஊழல் கண்காணிப்பு (MCW) தலைவர் ஜெய்ஸ் அப்துல் கரீம் கூறினார்.

PDRM ஆனது உள் கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான புகார்கள் தொடர்பான வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ள இது உதவும் என்று அவர் கூறினார்.

“பிரிட்டிஷ் தம்பதியிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோப் பதிவு குறித்த உறுப்பினரை மட்டுமன்றி ஒட்டுமொத்த PDRM இன் கண்ணியத்தை பாதித்தது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here