காணாமல் போன மகளைத் தேடும் அர்ப்பணிப்பான தந்தை

நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் காணாமல் போன தனது மகள் நூர் ஹபிசா ஜைலானை (23) தேடுவதில் ஒரு தந்தையின் அர்ப்பணிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

நூர் ஹஃபிசா, முவாத்ஸாம் ஷாவிற்கு அருகிலுள்ள புக்கிட் இபாம், கம்போங் அவுரில் உள்ள தொங்கு பாலத்தில் இருந்து விழுந்து வலுவான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, காவல்துறை, ஆயுதப் படைகள் மற்றும் மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று நிலம் மற்றும் நீர் வழியாக அவளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நூர் ஹஃபிசா காணாமல் போய் 16 நாட்கள் ஆகிறது. ஆனால் அவரது தந்தை தனது மகளைத் தேடுவதில் சளைக்காமல் இருக்கிறார். @evanoza_ இன் வைரலான TikTok வீடியோவில், நூர் ஹஃபிசா கடைசியாகக் காணப்பட்ட பகுதிக்கு அவர் உறுதியாக நடந்து செல்வதைக் காணலாம்.

 மற்றொரு வீடியோ புதுப்பிப்பில், மகள் விழுந்த தொங்கு பாலத்தில் தந்தை இருந்தார். அவரது மகளைத் தேடிய 15 ஆவது நாளில், காணாமல் போன அவரது மகள் கடைசியாக இருந்த இடத்தில் அவளை மீட்பதில் ஏதேனும் முன்னேற்றங்களுக்காக காத்திருந்தார்.

இதற்கிடையில், நூர் ஹபிசாவைத் தேடும் 16ஆவது நாளில், அவள் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இன்னும் தென்படவில்லை. மேலும் வீடியோவில், பல படகுகள் ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என ஆற்றைச் சுற்றி வருவது காண முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here