அனைத்து Keretapi Tanah Melayu Bhd (KTMB) நிலையங்களிலும் ஓராண்டுக்குள் மின்தூக்கி (லிஃப்ட்) பொருத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார். ரயில் நிலையங்களில் லிப்ட் இல்லாததால் பயணிகள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் சிரமத்திற்கு உள்ளாவதாக பொதுமக்கள் அடிக்கடி புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆண்டு லிஃப்ட்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. அனைத்து பயணிகள் நிலையங்களிலும் ஒரு வருடத்திற்குள் லிஃப்ட் இருக்க வேண்டும் என்று Railway Assets Corporation (RAC) உருவாக்கியுள்ள Railway Assets Intelligence System (RAILS) மொபைல் செயலியை இன்று இங்கு அறிமுகப்படுத்தியபோது அவர் கூறினார்.
வசதிகளை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நிலையங்கள் தொடர்பாக அமைச்சகத்திடம் அவசரமாக சமர்பிப்பதற்காக, KTMB உடன் இணைந்து தணிக்கை அறிக்கையைத் தயாரிக்க RACக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக லோக் கூறினார்.