கிளாந்தானில் உள்ள உணவகத்தில் அரைக் காற்சட்டை அணிந்ததற்காக ஏழு ஆடவர்களுக்கு எச்சரிக்கை -மத விவகாரத் துறை

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 17), முழங்காலுக்கு மேல் தொடை தெரியும்படி அரைக் காற்சட்டை அணிந்ததற்காக ஏழு ஆண்களுக்கு கிளாந்தான் மத விவகாரத் துறை (JHEAIK) எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியது.

தானா மேரா மாவட்ட கவுன்சில், தனா மேரா சுகாதாரத் துறை, தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் மற்றும் மத விவகாரத் துறை ஆகியவை இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, குறித்த ஏழு பேரும் கடையில் ‘ஷிஷா’ புகைபிடிப்பதாக கூறப்பட்டுள்ளது.

கெர்டாக் சேபார் அருகே உள்ள உணவகத்தில் ‘ஷிஷா’ புகைபிடிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இந்த சோதனை ஏற்பாடு செய்யப்பட்டதாக மாவட்ட கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த சோதனையைத் தொடர்ந்து “ஏழு ‘ஷிஷா’ பைப்புகளை கைப்பற்றியதுடன், கடை நடத்துனருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அத்தோடு தொடை தெரியும்படி அரைக் காற்சட்டை அணிந்ததற்காக ஏழு ஆண்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

“அதே நேரத்தில், புகையிலை தயாரிப்பு கட்டுப்பாடுகள் 2004ன் கீழ் மொத்தம் RM1,900 மதிப்புள்ள 11 அபராதங்களை சுகாதாரத் துறை வெளியிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here