கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை முதல் மே 16-ஆம் தேதி வரை ரஷ்யாவிற்கு மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பை ஏற்று பிரதமர் அங்குச் செல்ல திட்டமிட்டிருப்பதாக பிரதமரின் மூத்த செய்தித் தொடர்பாளர் துங்கு நஷ்ருல் அபைடா தெரிவித்தார்.
மே 13 முதல் 15 வரை மாஸ்கோ, பின்னர் டாடர்ஸ்தானின் கசானுக்கும் அவர் செல்லவுள்ளார்.
மேலும் மாஸ்கோவில் இருக்கும்போது, அவர் மாஸ்கோ மாநில அனைத்துலக உறவுகள் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவார். அதன் பின் ரஷ்ய தொழிலதிபர்களுடன் சந்திப்புகளை நடத்துவார் என்றும் அவர் கூறினார்.




















