ரமலான் நோன்பு மாதத்தை முன்னிட்டு, 2.4 மில்லியன் கோழி முட்டைகளை நாடு முழுவதும் விநியோகிக்கிறது மலாக்கா

புனித ரமலான் நோன்பு மாதம் மற்றும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, மலாக்காவிலிருந்து மொத்தம் 2.4 மில்லியன் கோழி முட்டைகள் தீபகற்ப மலேசியா முழுவதும் விநியோகிக்கப்படும்.

மலேசிய சந்தைகளில் இந்த நோன்பு மாதத்தில் முட்டைகளின் தேவைகள் இயல்பை விட சுமார் 10 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மலாக்கா FAMA-யின் இயக்குநர் ஹைருடின் யூனோஸ் தெரிவித்தார்.

“ரமலானுக்கு முன்னதாக நாட்டிலுள்ள சந்தைகளுக்கு போதுமான முட்டை விநியோகம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இந்த ஜூன் வரை கணக்கெடுப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து, FAMA Melaka கிட்டத்தட்ட 9.6 மில்லியன் முட்டைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது என்று ஹைருடின் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here