ஜோகூரில் இன்னமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 967 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஜோகூரின் பத்து பகாட் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 268 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 967 பேர் இன்னமும் தற்காலிக நிவாரண மையத்தில் தங்கி உள்ளனர்.

நேற்றிரவு 8 மணியளவில் பதிவான 299 குடும்பங்களைச் சேர்ந்த 1,086 பேருடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதாக மாநில செயலாளர், டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.

“பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான அரசாங்கத்தின் பல முயற்சிகள் காரணமாகவும், கடந்த சில நாட்களாக அங்கு நிலவிவரும் வெயில் காலநிலை காரணமாகவும், ஜோகூர் மாநிலத்தில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here