கோலாலம்பூர் காவல்துறைத் தலைவராக டத்தோ யஹாயா ஓத்மான் பதவியை ஏற்றார்

கோலாலம்பூர் காவல்துறையின் புதிய தலைவராக டத்தோ யஹாயா ஓத்மான் நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுவரை அந்தப்பொறுப்பில் இருந்த டத்தோ அஸ்மி அபு காசிம் வரும் ஏப்ரல் 17 அன்று புக்கிட் அமான் முகாமைத்துவ தலைவராக பதவி உயர்வு பெறுவதால், அவரிடமிருந்து யஹாயா இன்று பணியை ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில், தான் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் பதவியை ஏற்றபோது, ​​கோவிட்-19 தொற்றுநோய்களின் போது கோலாலம்பூர் போலீஸ் படையை நிர்வகித்த அனுபவம் தனக்கு மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது என்று அஸ்மி கூறினார்.

“இந்தக் குழுவிற்கு நான் தலைமை தாங்கிய இரண்டு ஆண்டுகளில், எனக்கு சகலவிதங்களிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கோலாலம்பூர் காவல்துறை உறுப்பினர்கள் முதல் அதிகாரிகள் வரை பதவி வேறுபாடின்றி நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here