சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க் கைதா? உண்மையில்லை என்கிறார் அவரின் வழக்கறிஞர்

ஜாகிர் நாயக் ஓமானில் தடுத்து வைக்கப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்ற செய்தியை அவரின் வழக்கறிஞர் மறுத்துள்ளார். நாயக்கிற்கு உண்மையில் அதன் தலைநகரான மஸ்கட்டில் அரச வரவேற்பு அளிக்கப்பட்டதாக அக்பர்டின் அப்துல் காதர் கூறினார்.

அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் அவர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார் என்று அக்பர்டின் எப்ஃஎம்டியிடம் கூறினார்.

அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களால் உருவாக்கப்பட்ட “புனையப்பட்ட செய்தி” என்பதைத் தவிர வேறில்லை என்றும் நாயக் அவரிடம் கூறினார்.

நாயக் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பதிவேற்றியிருந்தார், மார்ச் 22 அதிகாலையில் தான் ஓமன் நாட்டுக்கு பத்திரமாக வந்து சேர்ந்ததாக  தெரிவித்தார். தனக்கு கிடைத்த அன்பான வரவேற்புக்கு ஓமன் சுல்தானுக்கு நன்றி தெரிவித்தார்.

நாயக் ஓமானில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று இந்திய ஆங்கில மொழி செய்தி சேனல் நியூஸ்18 நேற்று இரவு செய்தி வெளியிட்டது. அறிக்கையின்படி, வியாழன் அன்று நாயக்கை கைது செய்ய இந்திய உளவுத்துறை ஓமன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறியது.

நாயக் மலேசியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்று புத்ராஜெயாவில் வசித்து வருகிறார். பணமோசடி மற்றும் பிற சட்டவிரோத செயல்களுக்காக சர்ச்சைக்குரிய சமயபோதகர் இந்தியாவில் விசாரணைக்காக தேடப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here