கனடா பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்

கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணம் ஹாலிபாக்ஸ் பகுதியில் உள்ள பள்ளியில் நேற்று முன்தினம் வழக்கம் போல் இயங்கியது. அப்போது ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது மாணவன் ஒருவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை குத்தினான்.

இதனால் பயந்து போன மாணவர்கள் கூச்சலிட்டு அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர். இதனையடுத்து அருகில் உள்ள வகுப்பறையில் இருந்த ஆசிரியர் வந்து மாணவனை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த மாணவன் கத்தியால் குத்தினான். மேலும் இந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவனுக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் பள்ளிக்கூடத்துக்கு விரைந்தனர். அவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here