ரமலானின் முதல் நாள் ஜித்தாவிலுள்ள மலேசியர்களுடன் பிரதமர் நோன்பு துறந்தார்

ஜித்தா: ரமலானின் முதல் நாளான நேற்று வியாழக்கிழமை (மார்ச் 23), ஜித்தாவில் (Jeddah) வசிக்கும் சுமார் 200 மலேசியர்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நோன்பு துறந்தார்.

சவூதி அரேபியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில் இங்குள்ள மலேசியத் தூதரகத்தை வந்தடைந்தார்.

அவருடன் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் இயக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் ஆகியோர் உடன் இருந்தனர்.

குறித்த நோன்பு துறக்கும் நிகழ்வில் பங்குகொண்ட அன்வார், ரமலான் மாதத்தில் ஐக்கிய அரபு ராஜ்யத்தைப் பார்வையிட வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

சுமார் 5,000 மலேசியர்கள் சவுதி அரேபியாவில் வசிக்கின்றனர், அவர்களில் சுமார் 800 பேர் ஜித்தா மற்றும் மக்காவில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here