இன்று மாலை 4 மணி நிலவரப்படி, பத்து பகாட்டில் 37 குடும்பங்களை சேர்ந்த 141 பேர் அங்குள்ள தற்காலிக வெளியேற்ற மையத்தில் இன்னும் வசித்து வருகின்றனர்.
இன்று காலை நிவாரண மையங்களில் தங்கியிருந்த 64 குடும்பங்களை சேர்ந்த 253 பேருடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாக ஜோகூர் மாநில அரசாங்கத்தின் செயலாளர், டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி தெரிவித்தார்.