தேவாலயம் மற்றும் கோயில்களில் நடக்கும் திருமணங்களில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளலாம் – சிலாங்கூர் சுல்தான்

“முஸ்லிம்கள் தேவாலயம் மற்றும் கோயில்களில் நடக்கும் திருமணத்திலோ அல்லது நிகழ்வுகளிலோ கலந்து கொள்வதில் தவறில்லை” என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா தெரிவித்தார்.

இருப்பினும், முஸ்லிம்கள் கோயில்கள் அல்லது தேவாலயங்களில் நடுங்கும் சடங்குகள் அல்லது வழிபாடுகளில் பங்கேற்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

1953 ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் அவரது மறைந்த தாத்தா சுல்தான் ஆலம் ஷா கலந்து கொண்டார் என்று சுல்தான் ஷராபுதீன் கூறினார். இது லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெற்றது என்றார்.

“அவர் அப்போதுதான் மக்காவிலிருந்து திரும்பியிருந்தார். முடிசூட்டு விழாவில் பங்கேற்பது ஏற்புடையதா என்று அவர் மாநில முப்தியிடம் ஆலோசனை நடத்தினார்.

“தொழுகை போன்ற எந்த சடங்குகளிலும் அவர் பங்கேற்கவில்லை என்றால் அதில் எந்த தவறும் இல்லை என்று முஃப்தி கூறினார்,” என்று அவர் மேற்கோள் காட்டினார்.

மேலும் சிலுவையை ஒத்த பதக்கங்கள் உட்பட பதக்கங்கள் மற்றும் சின்னங்களை தனது சீருடையில் அணியலாம் என்று, தனது தந்தைக்கு அந்த முஃப்தி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

சிலாங்கூர் ஆட்சியாளரின் நிலைப்பாடு கடந்த வாரம் ஜோகூர் சுல்தானின் நிலைப்பாட்டை ஒத்துப்போகிறது, மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் சடங்குகள் அல்லது பிரார்த்தனைகளில் பங்கேற்காத வரை மற்ற மதத்தவர்களின் வழிபாட்டு தளங்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ செல்லலாம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here