குழந்தை பராமரிப்பு மைய துஷ்பிரயோகம் தொடர்பில் காவல்துறைக்கு மேலும் 3 புகார்கள் பதிவு

கோலாலம்பூர்:

நேற்று நிலவரப்படி, செராஸ் மாநிலம் பண்டார் ஸ்ரீ பெர்மைசூரியில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக பெற்றோரிடம் இருந்து மேலும் 3 புகார்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக, கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை தனது இரண்டு வயது மகள் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறி தந்தையொருவர் காவல் துறைக்கு புகார் அளித்திருந்தார்.

“இந்த முதல் புகாரைத் தொடர்ந்து, மேலும் சில பெற்றோர்கள் போலீஸ் புகாரளிக்க தயாரிக்க முன்வந்தனர்… இதுவரை பராமரிப்பு மையத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான நான்கு குழந்தைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் நான்கு புகார்களை ப் பெற்றுள்ளோம்.

“குழந்தை சம்பந்தப்பட்ட காயங்கள் இன்னும் பரிசோதனை செயல்பாட்டில் உள்ளன, அத்தோடு நாங்கள் மருத்துவமனையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்,” என்று அவர் இன்று கோலாலம்பூர் போலீஸ் கன்டிஜென்ட் தலைமையகத்தில் (IPK) பாரம்பரிய சீன மருத்துவ சுகாதார சிகிச்சை திட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here