பத்து பகாட்டில் RM157,800 மதிப்புள்ள கஞ்சாவுடன் பட்டறை தொழிலாளி ஒருவர் கைது

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில், பத்து பகாட்டின் யோங் பெங்கில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், RM157,800 மதிப்புள்ள 63.12 கிலோகிராம் எடையுள்ள 70 பதப்படுத்தப்பட்ட கஞ்சா துண்டுகளுடன் 37 வயதுடைய பட்டறை தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபருக்கு எதிராக முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை என்றும், சிறுநீர் பரிசோதனையிலும் அவர் போதைப்பொருளுக்கு சாதாகமான பதிலை பெறவில்லை என்றும், பத்து பகாட் மாவட்ட காவல்துறையின் தலைவர், துணை ஆணையர் இஸ்மாயில் டோல்லா கூறினார்.

“சந்தேக நபர் ஒரு பல்நோக்கு வாகனத்தை ஜோகூர் முழுவதும் விநியோக சேவைகளுக்குப் பயன்படுத்துவதோடு, போதை மருந்துகளைச் சேமித்து வைப்பதற்காக ஒரு கடையாகவும் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

“சந்தேக நபர் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார், அத்தோடு தாய்லாந்தில் இருந்து உள்ளூர் சந்தைக்காக குறித்த கஞ்சா கொண்டுவரப்பட்டது என்று நம்பப்படுவதாகவும்,” அவர் மேலும் கூறினார்.

ஆபத்தான மருந்துகள் சட்டம் (ADB) 1952 இன் பிரிவு 39B இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது, சந்தேகநபர் விசாரணைக்கு உதவுவதற்காக ஏப்ரல் 1 ஆம் திகதி வரை ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here